சென்னை-மதுரை இடையே அதிவேக சிறப்பு இரயில் ஏப்ரல் 18-ந்தேதி முதல் இயங்கும்: தெற்கு இரயில்வே..

வாரம் இருமுறை இயங்கும் அதிவேக சிறப்பு இரயில் மதுரை- சென்னை எழும்பூர் இடையே அடுத்த மாதம் 17-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. 18-ந் தேதி முதல் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்கிறது.

மதுரையில் இருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும், எழும்பூரில் இருந்து வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த சிறப்பு இரயில் இயக்கப்படுகிறது.

எழும்பூரில் இருந்து இரவு 10.05 மணிக்கு சூப்பர் பாஸ்ட் இரயில் புறப்பட்டு காலை 8.10 மணிக்கு மதுரை சென்றடைகிறது. மதுரையில் இருந்து இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு காலை 6.55 மணிக்கு வந்து சேருகிறது.

இந்த இரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், திருச்சி, திண்டுக்கல் வழியாக மதுரை செல்கிறது.

கரோனா காலத்தில் கடன்களுக்கான வட்டியினை தள்ளுபடி செய்ய முடியாது : உச்சநீதிமன்றம்…

சட்டப்பேரவைத் தேர்தல் : சேலத்தில் 28ந்தேதி மு.க.ஸ்டாலின்-ராகுல் காந்தி ஒரே மேடையில் பரப்புரை..

Recent Posts