சென்னை மணலியில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால், கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால், குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்புக்குள்ளானது.
இந்நிலையில், சென்னை மணலியில் மழையால் பாதிக்கப்பட்ட வடிவுடையம்மன் நகர், நாகலட்சுமி நகர் பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து புதுநகர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில், அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் பங்கேற்றனர்.