நாளைை (அக்-7) மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிக அதி கனமழை வாய்ப்பு இல்லாததால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தெற்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த பகுதி அதே இடத்தில் நிலை கொண்டுள்ளதால், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுவிழந்து விட்டதாக கூறியுள்ளார். இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்றும், இதன் காரணமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்படுவதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்தர்.
கோவை, நீலகிரி, தேனி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரியில் நாளை ஓரிரு இடங்களில் மட்டும் கனமழை பெய்யும் எனவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காரைக்காலில் 12 செ.மீ., மழைப்பதிவாகி உள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Chennai Meteorological Withdraw Red Alert announcement