முக்கிய செய்திகள்

சென்னை – நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..


சென்னை எழும்பூரில்இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்குசிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை, நாகர்கோவில் வழியாக செல்லும் சிறப்பு ரயில்கள் தொடர்பானதகவலை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. சென்னை எழும்பூர் – நெல்லை சிறப்பு கட்டண ரயில் ஆகஸ்டு 3, 17, 24, 31 மற்றும் செப்டம்பர் 7, 21 ஆகிய தேதிகளில் எழும்பூரில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.50 மணிக்கு நெல்லை சென்றடையும்.

அதுபோலவண்டி எண்: 6002 ரயில் செப்டம்பர் 2, 9, 23 ஆகிய தேதிகளில் மாலை 4 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

சென்னை சென்ட்ரல் – ஏர்ணாகுளம் சிறப்பு கட்டணரயில்எண்: 6005ஆகஸ்ட் 3, 31 மற்றும் செப்டம்பர்7, 21 ஆகிய தேதிகளில் சென்ட்ரலில் இருந்துஇரவு 8 மணிக்கு புறப்படும். அந்த ரயில் மறுநாள் காலை 8.35 மணிக்கு ஏர்ணாகுளம் செல்லும். அதாபோல் ஆக்ஸ்ட் 12மற்றும்செப்டம்பர் 2, 9, 23 ஆகிய தேதிகளில் எர்ணகுளத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும். அந்த ரயிலானதுமறுநாள்காலை 7.20 மணிக்குசென்ட்ரல் வந்தடையும்.
சென்னை-நாகர்கோவில் சிறப்பு கட்டண ரயில்

வண்டி எண்6007 ரயில்கள்ஆகஸ்டு 7, 14, 28 மற்றும் செப்டம்பர் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் சென்ட்ரலில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படுகிறது. அந்த ரயிலானதுமறுநாள் காலை 11.05 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

வண்டி எண்6008 ரயில் ஆகஸ்டு 8, 22, 29 மற்றும் செப்டம்பர் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து மாலை 5மணிக்கு புறப்படும். அந்த ரயிலானதுமறுநாள் காலை 7.20 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.