காரைக்குடி வட்ட இரயில் பயணிகள் நலச்சங்கத்தின் “நிர்வாகக் குழுக் கூட்டம்” (டிச- 19 வியாழன் – மாலை) MA சிதம்பரம் அரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய இரயில்வே துறைக்கு கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் : 2012 ஆம் ஆண்டுக்கு முன்பு காரைக்குடி To மயிலாடுதுறைத் தினசரி பாசஞ்சர் ரயிலை மீண்டும் இயங்கவும், திருவாரூர் To காரைக்குடி, மானாமதுரை வழியில் மதுரைக்கு புதிய ரயிலும், இராமேசுவரம் To சென்னைக்கு பகல் நேரத்தில் இண்டர் சிட்டி ரயிலையும் இயக்க வேண்டும் ஆகிவைகளை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தலைவர் VR. இராமநாதன் (எ) மோகன் தலைமையில் பொருளாளர் R. இராம்குமார் முன்னிலையில் நடந்தது. சங்க ஆலோசகர் சாமிதிராவிடமணி, ஆர்கனைசர் S. கண்ணப்பன், கருத்துரையாற்றினார்கள். செயலாளர் கோவிந்தசாமி (எ) இராமு நன்றி கூறினார்.
இக் கூட்டத்தில் தேவகோட்டை வர்த்தகர் சங்கத் தலைவர். மகபூப்பாட்சா உரையாற்றினார்கள் மற்றும் R.சரவணன், S.மஸ்தான் கணி, K. மணிமாறன், R மாணிக்கம்,தொழிலதிபர் நருவிழி கிருஷ்ணன், லியாக்கத் அலி மாநகர்மன்ற உறுப்பினர்கள் ஹேமலதா செந்தில் MC, இராதாபாண்டி MC, அமுதா MC, V. பரமேஸ்வரன், சாயிதர்மராஜ், M. அழகப்பன், உட்பட 18 பேர்கள் பங்கேற்றார்கள்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்