
சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழந்த கார் ஓட்டுனர் முருகன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை சேலையூரில் வசித்து வரும் கார் ஓட்டுனர் முருகன் (வயது-30) ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழந்துள்ளார்.இந்நிலையில் இன்று துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொண்ட முருகனுக்கு கடந்தாண்டு தான் திருமணம் நடைபெற்றது. தற்போது தான் குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்க்கது
ஆன்லைன் ரம்மி விளையாடிய பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்வது தற்போது அதிகரித்து வருகிறது. தமிழக அரசு ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகவுள்ளது.