முக்கிய செய்திகள்

சென்னை தவிர தமிழகம் முழுவதும் ஆட்டோ, ரிக்ஷா இயங்க தமிழக அரசு அனுமதி

தமிழகம் முழுவதும் ஆட்டோ ரிக்ஷா இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
பொதுமுடக்கம் காரணமாக ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா இயங்க அரசு தடைவிதிருந்தது.

பொதுமுடக்கத் தளர்வுகளிலும் ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா ,இயங்க அனுமதிக்கவில்லை . ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா இயக்க அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி காவல் எல்லையத் தவிர தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா ஆகிய வாகனங்கள் நாளை முதல் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி மட்டுமே பயணிக்கும் வகையில் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.