சென்னையில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்…

வெப்பச்சலனத்தால் தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையிலும் 2 நாட்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தென்மேற்குப் பருவமழையால் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நெல்லை மாவட்டங்களில் 2 நாட்களில்

கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தமிழகத்தில் வெப்ப நிலை படிப்படியாக குறைந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் 7 சென்டிமீட்டரும், தேவாலாவில் 4 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.