சென்னை தி.நகரில் கொட்டும் மழையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..

சென்னை தியாகராயர் நகரில் கொட்டும் மழையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுவருகிறார். கொட்டும் மழையில் நடந்து சென்று மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஆய்வு செய்தார்.தற்போது நந்தனத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
கடந்த நான்கு நாட்களாக வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் முதல்வர் ஆய்வு செய்து நிவரணப்பணிகளைத் துரிதப்படுத்தி வருகிறார்.

சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடக்கின்றன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஸ்மார்ட் சிட்டி பணிகளில் லஞ்சம், ஊழல் நடந்ததால் தி.நகருக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எதுவும் செய்ததால் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரைகுறையாக நடந்த ஸ்மார்ட் சிட்டி பணிகளால் தான் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது..

காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பில்லை : வானிலை மையம்..

Recent Posts