முக்கிய செய்திகள்

சென்னை ரயில் நிலையத்தில் பயங்கர ஆயுதங்களுடன் மாணவர்கள் வன்முறை..


சென்னை அம்பத்தூர் அருகே ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் ஆயுதங்களுடன் மோதிக் கொண்டதில் இருவர் காயமடைந்தனர்.

சென்னை கடற்கரை முதல் திருத்தணி வரை செல்லும் மின்சார ரயிலில் மாநிலக் கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். கொரட்டூரை கடந்து ரயில் வந்துகொண்டிருந்தபோது இரு கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது.

ரயில் பட்டரவாக்கம் ரயில் நிலையம் வந்தபோது இரண்டு கல்லூரி மாணவர்களும் கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். இதில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் இருவருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து அம்பத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.