காசோலை மோசடி வழக்கில் சரத்குமார், ராதிகாவுக்கு கைது வாரண்ட்..

2 கோடி ரூபாய் காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி நடிகை ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு ஜாமீனில் வெளிவரக்கூடிய கைது வாரண்ட் பிறப்பித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில், ராடியன்ஸ் என்ற நிறுவனத்திடம் கடந்த 2014 ஆம் ஆண்டு 7 காசோலைகள் கொடுத்து 2 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டது.

வாங்கிய பணத்தை திருப்பி அளிக்காததால் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமாருக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ராடியன்ஸ் நிறுவனம் சார்பில் கிரிமினல் வழக்கு தொடரபட்டது.

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி நடிகர் சரத்குமார், மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சைதாப்பேட்டை 3 ஆவது விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணை ஆறு மாதத்தில் விசாரித்து முடிக்க உத்தரவிட்டது.

அதன்படி இந்த வழக்கு சைதாப்பேட்டை 3ஆவது விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் நேரில் ஆஜராகவில்லை.

எனவே இருவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர கூடிய கைது வாரண்ட் பிறப்பித்த நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 12 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டர்.

தமிழகத்தில் வலுக்கட்டாயமாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாது: அமைச்சர் தர்மேந்திர பிரதான்..

அத்திவரதரை தரிசனம் செய்ய வசூலிக்கப்பட்ட ரூ.50 கட்டணம் ரத்து : ஆட்சியர் அறிவிப்பு

Recent Posts