காரைக்குடி சட்டமன்ற தேர்தலில் திமுக-காங் கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து காரைக்குடி மீனாட்சிபுரம் மஹபூப்பாளையம் சமாத்தில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.மாங்குடிக்கு கைச்சின்னத்தில் வாங்களிக்க முன்னாள் மத்திய அமைச்சர் பசிதம்பரம் ஆதரவு திரட்டினார்.
அப்போது பேசிய அவர்..
மத்திய பாஜக அரசு இஸ்லாமியர்களக்கு எதிரான சட்டங்களை கொண்டுவருகிறது. அதில் குடியுரிமை கொடுமை சட்டம் கொண்டுவந்துள்ளது. இஸ்லாமியர்களை அச்சமூட்டுவதற்காக கொண்டுவந்துள்ளது..
தன்னிடம் அசுர பலம் உள்ளதாக எண்ணிக் கொண்டிருக்கிறது. ஆனால் நாம் “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே“ என பாரதியின் பாடல் படி நாம் எந்த சூழ்நிலைியிலும் அச்சப்படப் தேவையில்லை.
தமிழக மக்களிடம் குறிப்பாக தென் இந்திய மக்களிடம் அவர்களின் மதவெறி ஒருநாளும் எடுபடாது. தமிழ் கலாச்சாரம் 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. உதாரணம் திருப்பாச்செத்தி அருகே உள்ள கல் வெட்டு, தமிழ் இலக்கியத்தில் இஸ்லாமிய இலக்கியங்கள் பல கோலேச்சியுள்ளன. கலைஞரால் புகழப்பெற்ற சிறந்த கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் தமிழாக வாழ்ந்தவர்..
நாட்டை பிளவுபடுத்தி ஆதாயம் தேட துடிக்குது பாஜக அரசு நம் பகுதியில் ஒரு பழமொழி உண்டு “ஆமை புகுந்த வீடும்.. அமினா புகுந்த வீடும் உருப்படாது என்பார்கள்“ அதபோல்தான் பாஜக புகுந்த மாநிலம்,நாடும் உருப்படாது.
மேலும் அவர் காங்கிரஸ் கட்சியிடம் ஒரு இரகசியம் இருந்தது. ஆனால் அந்த இரகசியம் தற்போது உடைக்கப்பட்டுள்ளது. ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர்கள் சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்படமாட்டார்கள்.
ஆனால் இன்று சங்கராபுரம் பஞ்சாயத்தில் இரண்டு முறை ஊராட்சி தலைவர் பதவி வகித்த மாங்குடி அவர்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் எளிய மனிதர் எளிதில் அணுக கூடியவர் தான் தலைவராக இருந்த ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றியவர்.
இம்முறை காங்கிரஸ் தன் இரகசியத்திலிருந்து வெளிவந்து எளியவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. காரைக்குடியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குறித்து நான் சொல்லத் தேவையில்லை உங்களுக்கே புரியும்..பாஜகவின் அடிமை ஆட்சி யை மக்கள் முடிவுக் கொண்டுவரவேண்டும். என்று பேசினார்.
முன்னதாக காரைக்குடி மீனாட்சிபுரம் மஹபூப்பாளையம் சமாத் தலைவர் தாவூத் பாட்ஷா தலைமை வகித்து வரவேற்றுப் பேசினார் செயலாளர் எஸ் சீனி முகமது பொருளாளர் முத்தலிபு ஆகியோர் முன்னிலை வகிக்தனர். ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்