சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி இன்று தேரோட்டம்…

பஞ்ச பூத தலங்களில் ஆகாயத் தலமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தையொட்டி இன்று தேரோட்ட நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

சிவபெருமானின் பஞ்ச சபைகளில் பொற்சபையாகவும், பஞ்சபூத தலங்களில் ஆகாயத் தலமாகவும் போற்றப்படுவது சிதம்பரம் நடராஜர் ஆலயம்…

தில்லையம்பலத்தான், தில்லைநாயகன், ஆடல்வல்லான், நடன நாயகன் நடராஜர், மார்கழித் திருவாதிரை நாளன்று, தம் திருநடனக் காட்சியை பதஞ்சலி முனிவருக்கு காட்டிய இடம் சிதம்பரம்…

ஈசன் தன்னுடைய ஆனந்த தாண்டவத்தை காட்டி அருளிய நாள் ஆருத்ரா தரிசன நாள் ஆகும். இதையொட்டி சிதம்பரத்தில் இன்று தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெறுகிறது.

இதையொட்டி, நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் எழுந்தருளும் தேரோட்டம் நடைபெறுகிறது.

மிக நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்ட தேரில் சிவலீலைகளின் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன.

சிறப்பு ஆராதனைகள் நடைபெற்ற பிறகு, வேத கோஷங்கள் முழங்க, தேரோட்டம் நடைபெறுகிறது. சிதம்பரம் கோவில் தேரோட்டத்தையொட்டி சிதம்பரத்தில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.