சிதம்பரத்தில் போராட்டம் நடத்திய கல்லூாி மாணவா்கள் மீது தடியடி

சிதம்பரம் மாவட்டம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் காவிாி மேலாண்மை வாாியம் அமைக்கக் கோாி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்திய சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவிாி மேலாண்மை வாாியம் அமைக்காத மத்திய மாநில அரசுகளுக்கு எதிா்ப்பு தொிவித்து பல்வேறு கட்சியினா், அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் இதே கோாிக்கையை வலியுறுத்தி கடலூா் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள அண்ணாமலை பல்கலைக்கழக மாணவா்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இன்று காலையும் இதே கோாிக்கையை வலியுறுத்தில் பல்கலைக்கழக மாணவா்கள் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினா். ஏற்கனவே பாதுகாப்பு காரணம் கருதி அப்பகுதியில் காவல் துறையினா் குவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை மாணவா்களிடம் காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ஆனால் மாணவா்கள் பேச்சுவாா்த்தையை நிராகரித்து தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனைத் தொடா்ந்து காவல் துறையினா் அவா்களை கழைக்கும் முயற்சியில் தடியடி நடத்தி போராட்டக்காரா்களை வலுக்கட்டாயமாக காவல் துறையினா் அழைத்து சென்றனா்.

சீமான் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்கு..

பாதுகாப்பு அளிக்க சென்னை போலீசார் மறுப்பதால் போட்டி வேறு இடத்துக்கு மாற்றம்: ராஜிவ் சுக்லா

Recent Posts