முக்கொம்பில் மிகப் பழமையான கதவணை என்பதால் மதகுகள் உடைந்தன: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

முக்கொம்பு கதவணை மிக பழமையானது என்பதாலேயே மதகுகள் உடைந்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.   மதகுகள் உடைந்ததை நேரில் பார்வையிட்ட பின்னர் அவர் கூறியதாவது..

1800 களில் கட்டப்பட்ட பழமையான கதவணை என்பதால் மதகுகள் உடைந்துள்ளன. மணல் குவாரிக்கும், மதகுகள் உடைந்ததற்கும் தொடர்பில்லை. இரும்புக் கதவுகள் துருப்பிடித்ததே மதகுகள் உடையக் காரணம். 2 .புதிய கதவணைகள் கட்டப்படும். தற்காலிகமாக கதவணைகள் சீரமைக்கப்படும். தமிழகத்தில் அணைகள் பலமாக உள்ளன. முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை குறைக்காததே வெள்ளத்திற்கு காரணம் என்ற கேரளத்தின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. முக்கொம்பு மதகுகள் உடைப்பால் ஆபத்து எதுவும் இல்லை.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

 

 

Chief minister Edappadi Palanisamy explains on Mukkombu Damages