முக்கிய செய்திகள்

சிகாகோ உலகத் தமிழ் மாநாடு: அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் பங்கேற்க முடிவு..

அமெரிக்காவில் சிகாகோ நகரத்தில் உலகத் தமிழ் மாநாடு, ஜூலை 4 முதல் 7ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் பங்கேற்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

மாநாட்டில் பங்கேற்க தமிழ் அறிஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், வட அமெரிக்கா தமிழ்ச் சங்கமும் சிகாகோ தமிழ்ச் சங்கமும் மாநாட்டை நடத்துவதாக தெரிவித்துள்ளார்.