சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த அபிநயா என்பவரின் மகன் அருண்மொழிவர்மன் என்ற மூன்று வயதுக் குழந்தை ஐந்து ரூபாய் நாணயத்தை விழுங்கிவிட்டதாக காரைக்குடி குளோபல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.
அறுவை சிகிச்சை யின்றி குழந்தை விழுங்கிய நாணயத்தை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.நாணயத்தை விழுங்கிய குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு நாணயம் வெளியே எடுக்கப்பட்டு குழந்தை நலமாக உள்ளது .
இந்த சிகிச்சை பற்றி மருத்துவமனையில் தலைமை மருத்துவர் குமரேசன் அவர்கள் ,கூறும் போது அக்டோபர் 21ஆம் தேதி, எங்கள் மருத்துவமனையில் ஐந்து ரூபாய் நாணயத்தை விழுங்கி விட்டதாக மூணு வயது குழந்தையை கொண்டு வந்தனர். அவசர சிகிச்சை பிரிவு அனுமதித்து சிகிச்சை ஆரம்பித்தோம் .
எங்கள் மருத்துவ குழுவினரோடு கலந்து ஆலோசித்து, அறுவை சிகிச்சை இன்றி நவீன சிறப்பு சிகிச்சையின் மூலம் காயம் இன்றி ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியே கொண்டு வந்தோம். இந்த சிகிச்சைக்கு எங்கள் மருத்துவமனையின் மருத்துவர் குடல் மற்றும் ஆசனவாய் சிகிச்சை நிபுணர் ஸ்ரீராம் அவர்கள் பெரிதும் உறுதுணையாக இருந்தார் .அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், குழந்தை இப்போது நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர் குமரேசன் தெரிவித்தார்.
குழந்தை விழுங்கிய நாணயத்தை மிகவும் தீவிரமாக செய்ல்பட்டு அறுவை சிகிச்சையின்றி வெளியே எடுத்த குளோபல் மிஷின் மருத்துவமனைக்கும், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் பாராட்டுகள்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்