‘சீனா தான் எங்களுக்கு ரோல் மாடல்’ : பாக்., பிரதமராகும் இம்ரான் கான் பேச்சு..


பாகிஸ்தானில் அன்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இம்ரான் கட்சி அதிக இடங்களை பிடித்து ஆட்சியமைக்கவுள்ளது.

பாகிஸ்தானில் ஜனநாயகத்தை பலப்படுத்த பாடுபடுவேன் என்றும், இந்தியாவுடனான வர்த்தக உறவு வலுப்பெறும் என்றும் அந்நாட்டு பிரதமராக பொறுப்பேற்கவுள்ள இம்ரான்கான் இன்று அளித்த பேட்டியில் கூறினார்.

நாட்டின் பொருளாதாரம் பாதிப்பில் உள்ளது. இதனை மீட்டெடுப்போம். கடந்த சர்வாதிகாரிகளை மன்னிப்போம். வரும் காலங்களில், இது வரை இல்லாத அளவிற்கு பாகிஸ்தான் முன்னேற போகிறது.

சீனா, அமெரிக்கா உடனான நட்பு பலப்படும். சீனாவின் வளர்ச்சி நமக்கு உதாரணம். சீனாவிடம் நாம் கற்க வேண்டியுள்ளது.

இந்தியாவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்துவோம். காஷ்மீர் மக்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். இங்கு மனித மீறல்கள் நடக்கிறது. இந்த விவகாரத்தில் பேச்சு நடத்தி நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

இந்திய மீடியாக்கள் என்னை ஒரு வில்லனாக சித்தரிக்கிறது. இந்தியா மற்றும் ஆப்கனுடனான உறவை வலுப்பபடுத்த தயாராக இருக்கிறேன். ஊழல் இந்த நாட்டை கரையானாக, அரித்து வந்துள்ளது.

ஏழை மக்களின் தேவையை நிறைவேற்ற பாடுவடுவேன். இவ்வாறு இம்ரான்கான் கூறினார்.