சீனாவின் தியானமென் ((Tiananmen)) சதுக்க படுகொலை தினம் : ஏராளமான மக்கள் நினைவஞ்சலி கூட்டம்..

சீனாவின் தியானமென் ((Tiananmen)) சதுக்கத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளின் 30வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஏராளமான மக்கள் நினைவஞ்சலி செலுத்தினர்.

கடந்த 1989ம் ஆண்டு சீனாவில் ஜனநாயகம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று மாணவர்களும், தொழிலாளர்களும் போராட்டத்தில் இறங்கினர்.

இதையடுத்து அவர்கள் மீது அப்போதைய சீன அரசு கடுமையான அடக்கியது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து தியானமென் சதுக்கத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் ஹாங்காங் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி, அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது தியானமென் சதுக்கத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.