சீன துருப்புகள் ஊடுருவியிருக்கிறார்களா எனக் கேட்டால் சீறுவது ஏன்? : ப. சிதம்பரம் கேள்வி…

சீன துருப்புகள் ஊடுருவியிருக்கிறார்களா என்று கேட்டால் இது தேசத் துரோகம் என்று குதிப்பது ஏன் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “சீன துருப்புகள் இந்திய எல்லையைத் தாண்டி ஊடுருவியிருக்கிறார்களா, இந்திய நிலப்பகுதியில் ஆக்கிரமித்திருக்கிறார்களா என்று கேட்டால் அரசு தரப்பில் சீறுகிறார்கள், ஏன்?

ஆஹா, இது தேசத் துரோகம் என்று குதிக்கிறார்கள், ஏன்?

2004-2014 ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியின் போது இதே கேள்விகளை பாஜக பல முறை கேட்டார்களே, மறந்துவிட்டதா?

ஐ.மு கூட்டணியின் சீனா கொள்கையைக் கடுமையாக விமர்சித்தார்களே, அதுவும் மறந்துவிட்டதா?

ஒவ்வொரு முறையும் நாங்கள் பதில் சொன்னோம். ஊடுருவல் முயற்சி நடந்தது, ஆனால் முறியடிக்கப்பட்டது, 2004-2014 இல் இந்திய நிலப்பகுதியில் சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பதில் சொன்னோம்.

உண்டு, இல்லை என்று திரு மோடி அரசால் ஏன் பதில் சொல்ல முடியவில்லை?”இவ்வாறு ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்..

கபசுர குடிநீர் உள்ளிட்ட மருந்துகள் அடங்கிய தொகுப்பை வீடு வீடாக சென்று வழங்க விஜயகாந்த் வலியுறுத்தல்!..

“எடப்பாடியின் அதிகாரம் போலீஸ் கைக்குப் போனதா?” :மு.க.ஸ்டாலின் கேள்வி..

Recent Posts