தவறுகளைத் திருத்திக் கொள்ளாவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

அமெரிக்கா தனது தவறுகளைத் திருத்திக் கொள்ளாவிட்டால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என சீனா எச்சரித்துள்ளது.

இந்த விவகாரத்தில் அமெரிக்கா தனது தவறைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜெங் சுவாங் (GENG SHUANG) தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுடன் சீனா மேற்கொண்ட ராணுவ பரிவர்த்தனை, சர்வதேச விதிமுறைகளுக்கு முரணானதோ, மூன்றாவதாக மற்றொரு நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் உள்நோக்கத்தைக் கொண்டதோ அல்ல என்றும் ஜெங் சுவாங் விளக்கமளித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்ட ரஷ்யாவிடம் போர் விமானங்களை வாங்கியதைக் காரணம் காட்டி, சீன ராணுவத்தின் நிதி அமைப்புக்கு அமெரிக்கா பொருளாதரத் தடை விதித்தது. 

 

China Warns US

 

நெருப்புடன் விளையாட வேண்டாம்: அமெரிக்காவைப் பார்த்து ரஷ்யா ஜிவ்…

ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த உண்மையை வெளியிட்டதற்கு நன்றி ஹெலாந்தே: ராகுல்

Recent Posts