
மதுரை கள்ளழகர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா பரவல் காரணமாக வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. வரும் ஏப்ரல் 27ம் தேதி கள்ளழகர் கோயில் வளாகத்திலேயே ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவிழா நிகழ்வுகளை இணையத்தின் வழியாக ஒளிபரப்ப கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.