சென்னையில் பிரபல திரைப்படபாடலாசிரியரும்,கவிஞருமான சினேகன்-கன்னிகா திருமணம் நடைபெற்றது. நடிகர் கமல் தலைமையில் திருமணம் நடைபெற்றது.
தமிழ்த் திரையுலகில் பாடலாசிரியராக வலம் வரும் கவிஞர் சினேகன் 700-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சுமார் 2500 திரை இசைப்பாடல்களை எழுதியுள்ளார்.
நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யத்தின் இளைஞரணி மாநிலச் செயலாளராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் கவிஞர் சினேகனும்,சின்னத் திரை நடிகை கன்னிகா ரவியும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு இரு குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்து திருமணத்தை நிச்சயித்தனர்.
இன்று சென்னையில் நடிகர் கமல் திருமணத்தை நடத்திவைத்தார். திருமண நிகழ்வில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா,நடிகர் பாக்கியராஜ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.
இவர்களது திருமணம் சீர்திருத்த முறையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. திருமண வரவேற்பு நிகழ்வு இன்று மாலை நடைபெறவுள்ளது.