முக்கிய செய்திகள்

பிரபல முன்னணி ஒளிபதிவாளர் திடீர் மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்..


தமிழ் சினிமாவில் முன்னணி ஒளிபதிவாளராக விளங்கி வந்தவர் பிரியன், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படத்திற்கு ஒளிபதிவு செய்திருந்தவர்.
ஒளிப்பதிவாளர் ப்ரியன் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார்.  பொற்காலம் படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ப்ரியன் ‘ஆனந்தப் பூங்காற்று, மஜ்னு, வல்லவன், ஆறு, சிங்கம் 1,2,3 ‘ எனப் பல படங்களில் வேலை பார்த்திருக்கிறார். தற்போது சாமி இரண்டாம் பாகத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இவர் திடீரென தற்போது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார், இவரது மறைவு ஒட்டு மொத்த திரையுலகிலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுதியுள்ளது.
இவருடைய மறைவிற்கு பிரபலங்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர், அவருடைய ஆன்மா சாந்தியடைய நாமும் இறைவனை வேண்டி கொள்வோம்.