சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் ரூ.64 கோடியை பறிமுதல் செய்தது வருமானவரித்துறை…

சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் ரூ.64 கோடியை வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை மற்றும் மதுரையில் அன்புசெழியனுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.