கரோனா தொற்று பாதிப்பு தற்போது அதிகரித்து வரும் நிலையில் சிட்டியூனியன் வங்கி 12 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு பொது மருத்துவமனை்கு 6 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளும், தேவகோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு 6 ஆக்ஸின் செறிவூட்டிகளை வழங்கியது.
சிட்டி யூனியன் வங்கியின் துணை பொது மேலாளர் மற்றும் திட்டமிடல் நிர்வாகி B. வெங்கடேஷ்வரன் 6 ஆக்ஸிஜன் செறிவூட்டல் கருவிகளை காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் தர்மரிடம் வழங்கினார். அப்போது சிட்டி யூனியன் வங்கியின் வளர்ச்சி பிரிவு மேலாளர் P. கனேசன்,நிர்வாக மேலாண்மை பிரிவு மேலாளர் rm.லக்ஷ்மன்,காரைக்குடி சிட்டி யூனியன் வங்கியின் மேலாளர் K. அனுராதா,காரைக்குடி நகராட்சி ஆணையர் லக்ஷ்மணன், மற்றும் சுகாதார அலுவலர் சுந்தர், மாவட்ட செஞ்சிலுவைச்சங்கத்தின் துணை பெரும்தலைவர், சுந்தரராமன், மக்கள் மன்ற தலைவர் ராஜ்குமார், சிட்டி யூனியன் பேங்க் முன்னாள் மேலாளர் சந்திரசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் 6 ஆக்ஸிஜன் செறிவூட்டல் கருவிகள் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. அதனை தலைமை மருத்துவர் செந்தில் கதிர் பெற்றுக் கொண்டார்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்