இந்தியா – அமெரிக்கா இடையே காம்காசா ஒப்பந்தம்: அது என்ன?

 

டெல்லியில் இந்தியா – அமெரிக்கா இருதரப்பு பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையின் முடிவில் காம்காசா ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

அது என்ன காம்காசா ஒப்பந்தம்?

தி கம்யூனிகேசன் கம்பேட்டபிலிடி அன்ட் செக்கியூரிட்டி அக்ரிமென்ட் (The Communications Compatibility and Security Agreement )  என்பதன் சுருக்கம் தான் காம்காசா (COMCASA))!. அதாவது தகவல், ஒத்திசைவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம்.

இருதரப்பிலும் இரண்டு துறை அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தை என்பதால் இதனை டூ ப்ளஸ் டூ பேச்சுவார்த்தை என அழைக்கின்றனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியா தரப்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரும, அமெரிக்கா தரப்பில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மைக்கேல் ஆர் போம்பியோ, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேமஸ் மேத்திஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

முக்கியமாக பாதுகாப்புத்துறை தொடர்பான தகவல் தொழில்நுட்ப பரிமாற்றங்களைத்தான் இந்த ஒப்பந்தம் உறுதி செய்கிறது.

ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்

சிக்கலான பாதுகாப்பு தொழில்நுட்ப விவகாரங்களில் அமெரிக்கா இந்தியாவு்ககு உதவியாக இருக்கும்.

உதாரணமாக இந்தியப் பெருங் கடல் பகுதியில் சீன போர்க்கப்பலின்  நடமாட்டம் இருந்துஅதனை அமெரிக்கா கண்காணித்தால், அந்தத் தகவலை உடனடியாக இந்தியா அறிய முடியும்.

இந்தியாவின் பாதுகாப்புத்துறை தொழில்நுட்பத்தை என்கிரிப்ட் எனப்படும் குறியீட்டு முறையில் அமெரிக்கா பாதுகாக்கும்.

அதேபோல, அமெரிக்காவின் என்கிரிப்ட் எனப்படும் குறியீட்டு பாதுகாப்பு செய்யப்பட்ட ராணுவ தொழில்நுட்ப தகவல்களை இந்தியா தடையின்றி அறிந்து கொள்ளலாம்.

இந்தியாவின் அனுமதியின்றி எந்தத் தகவலையும் அமெரிக்கா பகிர்ந்து கொள்ள முடியாது

இருதரப்பும் ராணுவம் தொடர்பான தொழில்நுட்ப ரகசியங்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளலாம்.

இருநாடுகளுக்கும் இடையேயான காம்காசா ஒப்பந்தம் 10 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும். பின்னர் மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.

இவை போக ஹெச் 1 பி விசா பிரச்சினை, ஈரானிடம் எரிபொருள் வாங்க அமெரிக்கா தடைவிதிக்க இருக்கும் விவகாரம் உள்ளிட்ட வெளியுறவு சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டுள்ளது .ஆனால் .காம்காசா என்ற ஒப்பந்தம் பெரும்பாலும் பாதுகாப்பு தகவல் தொழில்நுட்ப பரிவர்த்தனை சார்ந்ததாகவே உள்ளது.

COMCASA Agreement: What is this?