18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கப்பட்ட வழக்கில், ஆளும் அதிமுக கட்சிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ள நிலையில்,
பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என முதல்வரும் துணை முதல்வரும் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர்.
அதிமுகவைச் சேர்ந்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர், ஆட்சியை கலைக்கும் விதமாக செயல்பட்டதாக கூறி, சபாநாயகர் தனபால் அவர்களை தகுதிநீக்கம் செய்தார்.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், சபாநாயகரின் தகுதி நீக்கத்தை எதிர்த்து அவர்கள் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்தஉயர்நீதிமன்ற நீதிபதிகள், சபாநாயகரின் முடிவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் இரு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை முழுவதும் நிறைவடைந்த நிலையில், மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார்.
அந்தத் தீர்ப்பில், 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லும் எனவும், சபாநாயகர் அவர்களை தகுதிநீக்கம் செய்தது சட்டவிரோதமானது இல்லை எனவும் அறிவித்தார். இதனால், 18 எம்எல்ஏக்களின் பதவியும் பறிபோனது.