ஆட்சிக்கு வந்து 6 ஆண்டுகளை கடந்தும் நல்ல காலம் வராதது ஏன்? : மோடிக்கு சிதம்பரம் கேள்வி

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக 3 விவகாரங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசுவாரா என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையிலும், 2020 -21- ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில்

பிரதமர் நரேந்திர மோடி டெல்லி பேரவைத் தேர்தலுக்கு முன்பாக 3 விவகாரங்கள் குறித்து பேச வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனுது டிவிட்டர் பக்க பதிவில், ஜனவரி 2019 -இல் 2 சதவீதமாக உயர்ந்த விலைவாசி, டிசம்பர் மாதம் 7.35 சதவீதமாக உயர்ந்துள்ளது.

2019-ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கைக்காக ஒதுக்கப்படும் தொகையானது ரூ.2.5 லட்சம் கோடியை விட சரியும்.

எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையினர் மற்றம் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான திட்டங்களுக்கான செலவு குறைவுக்கப்பட உள்ளது.

மக்கள் பொருளாதாரம் குறித்த உண்மைகளை தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். துஷ்பிரயோகம் மற்றும் பேச்சுதிறமை குறித்து அல்ல. ஆட்சிக்கு வந்து 6 ஆண்டுகளை கடந்த பின்னரும் நல்ல காலம் வராதது ஏன் என மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.

டெல்லியில் பாஜக தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்ற பாஜக நட்சத்திரப் பேச்சாளா்கள் பா்வேஷ் வா்மா, அனுராக் தாக்குா், பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா,

பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ் பாஜக கர்நாடக அமைச்சர் சி.டி.ரவி ஆகியோர் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடுவோரை கடுமையாக விமர்சித்தும், மத வன்முறையைத் தூண்டும் வகையிலும் பயன்படுத்திய மொழி திகைக்க வைக்கிறது.

அனுராக் தாக்குா், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடுவோரை விமா்சித்தாா். பின்னா், தேசவிரோதிகள் சுடப்பட வேண்டும் என கோஷம் எழுப்புமாறு தூண்டியதாகக் கூறப்படுகிறது.

அதேபோன்று, மேற்கு தில்லி பாஜக எம்பி பா்வேஷ் வா்மா பேசுகையில், காஷ்மீரில் காஷ்மீா் பண்டிட்களுக்கு நோ்ந்த கதி டெல்லியில் நேர முடியும்.

ஷஹீன் பாக் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவா்கள் வீடுகளுக்குள் புகுந்து கொலை, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முடியும் என்று அவா் எச்சரித்திருந்ததாகக் கூறப்படுகிறது. விரக்தியின் காரணமாக பாஜக இப்படிச் செய்து வருகிறது.

டெல்லி பேரவைத் தேர்தலில் தோல்வியை எதிர்கொண்டுள்ள பாஜக தலைவர்கள் நாகரீகமான அரசியல் பேச்சுக்களுக்கு பிரியாவிடை பெற்றுவிட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது.

பிரதமர் மோடியும், பாஜக தலைவரும் இத்தகைய தலைவர்களுக்கு அறிவுரை கூறாதது ஏன்? கண்டிக்காதது ஏன்? என சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாஜக -வில் இணைந்தார்..

பாரத் நெட் டெண்டர் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா? : அமைச்சர் உதயகுமாருக்கு ஐ.பெரியசாமி சவால்

Recent Posts