நகைச்சுவை நடிகர் விவேக் மரணம் : திரையுலகம் அதிர்ச்சி..

நசைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பால் சிகிச்சை பலனின்றி இன்று காலை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின் இறப்பு செய்தி தமிழக மக்களையும் திரையுலகையும் அதிரச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முற்போக்கு சிந்தனைகளோடு மூடநம்பிக்கைகளை தனது நசை்சுவை மூலம் மக்களுக்கு கொன்று சென்றவர் நடிகர் விவேக்.

திருநெல்வேலி படத்தில் எத்தை பெரியார் வந்தாலும் என ஆரம்பித்து மூடநம்பிக்கைகளை வேரறுப்பார். தாம் நடிக்கும் படங்களில் வரும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நகைச்சுவையுடன் விருந்தளிக்கும் வல்லவர்.

5 முறை தமிழக அரசின் வருது. 2009 -ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார்.
முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் இவரின் சமூக மற்றும் மூடநம்பிக்கைளுக்கு எதிரான கருத்துகளால் கவரப்பட்டு இவருக்கு சின்ன கலைவாணர் என்ற பட்டம் வழங்கினார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் கலாம் பவுன்டேசன் ஆரம்பித்து ஒரு கோடி மரங்கள் நடும் திட்டத்தை தொடங்ினார். தமிழகம் முழுவதும் பயணித்து லட்சக்கணக்ான மரங்களை நட்டார். பள்ளி,கல்லுாரிமாணவர்களிடம் மரம் நடுவது குறித்து விழுப்புணர்வை ஏற்படுத்தினார்.

1961-ல் சங்கரன் கோயிலில் பிற்ந்த அவர் மதுரை அமெரி்கன் கல்லுாரியில் பட்டம்பெற்றார். தமிழக அரசு பணியாளராக தலைமை செயலத்தில் 1986 முதல் 1992 வரை பணிபுரிந்தார்.

இயக்குனர் பாலசந்தர் இவரை மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தின் மூலம் அறிமுப்படுத்தினார். நகைச்சுவை நடிப்பில் உச்சம் தொட்டவர் விவேக்.
இவருடைய இழப்பு தமிழ் திரையுலகத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தமிழ் மக்கள் உள்ளங்களிலும் அவர் நட்டமரங்களிலும் காலம் உள்ளவரை வாழ்வார் விவேக்.

தோல்விக்கு ‘குட்பை’ சொல்லுங்கள்..!!: உற்சாகத் தொடர்..

கரோனா தொற்று எதிரொலி: டெல்லியில் ஏப்.26 வரை முழு ஊரடங்கு..

Recent Posts