தமிழகத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் அடுத்த வரும் நாட்களில் வெயில் மேலும் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அக்னி நட்சத்திரம் வருகிற 4-ஆம் தேதி தொடங்கும் முன்னரே சென்னையில் பகல் நேர வெப்பநிலை 107 டிகிரி பாரன் ஹீட்டாக பதிவாகி உள்ளது.
வியாழக்கிழமை அன்று சென்னையில் அனல் பறந்த நிலையில், வேலூர் 112, திருத்தணி 111 டிகிரி பாரான்ஹீட்டாக வெப்பம் பதிவாகி உள்ளது. இதே போன்று
மதுரையில் 106 டிகிரி, திருச்சியில் 105, கடலூர், பரமத்தி, நாகை, நெல்லை, பரங்கிப்பேட்டையில் தலா 104 டிகிரி பாரான்ஹீட்டாக வெப்பம் பதிவாகி உள்ளது.
இதே போன்று தருமபுரி, புதுச்சேரி, தூத்துக்குடியில் தலா 101 டிகிரியாகவும், சேலத்தில் 100 டிகிரி பாரான்ஹீட்டாகவும் வெப்பம் பதிவாகி உள்ளது.
இதனிடையே அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பநிலை மேலும் இரண்டு முதல் நான்கு டிகிரி வரை உயருமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.