முக்கிய செய்திகள்

காமன்வெல்த் 2018 : துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா தங்கம், வெள்ளி வென்று சாதனை..


கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு 2 பதக்கம் கிடைத்துள்ளது. காமன்வெல்த் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் தேஜஸ்வானி தங்கம் வென்று அசத்தியுள்ளார். மற்றொரு வீராங்கனை அஞ்சும் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். தங்கம் வென்ற தேஜஸ்வினி மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரை சேர்ந்தவராவர். வெள்ளிப்பதக்கம் வென்ற அஞ்சும் சண்டிகர் மாநிலத்தை சேர்ந்தவரார்.

21வது காமன்வெல்த் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்ட் நகரில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான், ஜமைக்கா, நைஜீரியா, கனடா, ஸ்காட்லாந்து, தென்ஆப்பிரிக்கா, மலேசியா, இலங்கை உள்பட 71 நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

காமன்வெல்த் போட்டியின் பதக்க பட்டியலில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகள் முறையே முதல் 2 இரண்டு இடங்களில் உள்ளன. இந்நிலையில் இந்தியா காமன்வெல்த் போட்டியில் இதுவரை 15 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலத்துடன் தரவரிசையில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.