தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருமான் தோழர் தா.பாண்டியன் உடல்நலக் குறைவால் இன்று சென்னை மருத்துவமனையில் காலமானார்.
1932-ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருக கீ் ழ் வெள்ளாப்பட்டியில் பிறந்தவர். தோழர் ஜீவாவால் அரசியலில் ஈர்க்கப்பட்டு தீவிர அரசியலில் பங்கேற்றவர்.
காரைக்குடி அழகப்பா கல்லுாரியில் பயின்று பின் அந்தக் கல்லுாரியில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றினார். சட்டம் பயின்று வழக்கறிஞர் பணியும் ஆற்றிவந்தார். காரைக்குடி கம்பன் கழகத்தின் மூலம் சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்தார்
இருமுறை வடசென்னை மக்களவை உறுப்பினராக பணியாற்றியவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 3 முறை மாநிலத் செயலாளராக இருந்து பல இளைஞர்களைக் கட்சியில் ஈர்த்தார்.
பன்முகத் தன்மை கொண்ட மிகச் செிறந்த பொதுவுடமைவாதி, எழுத்தாளர், பத்திரிக்கையாளார், பேச்சாளராகத் திகழ்ந்தவர். எட்டு நுால்கள் எழுதியுள்ளார். 6 நுால்களை மொழிபெயர்த்துள்ளார்.