இனி வாக்குச்சாவடி சீட்டு இருந்தாலும், வாக்காளர்கள் அடையாள அட்டை, ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற அரசு அடையாள அட்டைகளில் ஒன்றை வாக்களிக்கும்போது காண்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் வாக்களிப்பதற்கு புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சாவடி சீட்டு மட்டுமே போதாது எனவும், அரசு வழங்கிய அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றைக் கொண்டுவர வேண்டுமெனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வாக்குச்சாவடி சீட்டுகள் இருந்தாலே வாக்குப்பதிவு செய்து கொள்ள வாக்குச்சாவடி நிர்வாகிகள் அனுமதித்து வந்தனர்.
அதிலும் கடந்த சில தேர்தல்களில் இருந்து புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சாவடி சீட்டுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த தேர்தல் முதல் வாக்குச்சாவடி சீட்டை மட்டும் வைத்து வாக்களிக்க அனுமதியில்லை என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
புகைப்பட வாக்குச்சாவடி சீட்டை மட்டுமே வைத்துக் கொண்டு வாக்களிக்க அனுமதிப்பதால் பலவிதமான குளறுபடிகள் ஏற்படுகிறது.
அதனால் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசித்து ஒரு முடிவை எடுத்துள்ளது.
அதன்படி வாக்குச்சாவடி சீட்டு இருந்தாலும், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற அரசு அடையாள அட்டைகளில் ஒன்றை வாக்களிக்கும் போது காண்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.