கணினி கண்காணிப்பு நடவடிக்கை : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சம்மன்..

கணினி கண்காணிப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும் கண்காணிக்க சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பு, வருவாய்த்துறை, ரா உள்ளிட்ட 10 அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.

இந்த 10 அமைப்புகளுக்கும் தேவைப்படும் விவரங்களை தர மறுத்தால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதுபோன்ற கணினி கண்காணிப்பு நடவடிக்கையால் தனிநபர் உரிமை பறிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி, வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக 6 வாரத்திற்குள் பதிலளிக்கும் படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஈரானில் சரக்கு விமானம் விபத்து :10 பேர் உயிரிழப்பு…

அவனியாபுரத்தில் மாடுபிடி வீரர்களுக்கான இன்சூரன்ஸ் திட்டம்..

Recent Posts