முக்கிய செய்திகள்

காங். கூட்டணியில் யார் பிரதமர் என்று இப்போது முடிவு செய்யவேண்டியதில்லை

காங்கிரஸ் கூட்டணியில் பிரதமர் யார் என்பதை இப்போதைக்கு முடிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர், தற்போது பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே அனைவரின் முக்கியக் குறிக்கோள் என்றும்,

எதிர்கட்சிகளின் சார்பில் பிரதமர் யார் என்பதை முடிவு செய்ய தலைவர்கள் அனைவரும் பேசி முடிவு செய்வார்கள் என்றும் கூறினார்.

மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் தனது நிலைப்பாட்டை ஏற்கனவே தெரிவித்துள்ளதாக கூறிய சிதம்பரம், காங்கிரஸ் தலைவர் என்ற பொறுப்பில் மட்டும் ராகுல் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்