மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு தினம் இன்று, தமிழகத்தில் 1991- மே-21 அன்று இரவு 10.30 மணிக்கு ஸ்ரீபெரும்பதுாரில் ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பில் உயிரிழந்தார்.
அவரது 31-வது நினைவு தினம் நாடுமுழுவதும் பயங்கரவாத எதிர்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியினர் இராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கல்லுாரி சாலையில் அமைந்துள்ள இராஜீவ் காந்தி சிலைக்கு காங்கிரசார் இரு கோஷ்டிகளாக பிரிந்து தனித்தனியாக அஞ்சலி செலுத்தினர்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஆர்.இராமசாமி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் காலை 9 மணியளவில் காரைக்குடியில் உள்ள இராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி தலைமையில் 11 மணியளவில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் செலுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
ஒரு சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே இரு கோஷ்டிகளாப் பிரிந்து செயல்படுகிறவர்கள் எப்படி நாடு முழுவதும் ஒற்றுமையாக நின்று 2024-ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டுவருவார்கள்.
காங்கிரஸின் கோஷ்டி பூசலால் தான் பாஜக வளர்கிறது என்று ஆதங்கப்பட்டனர் காங்கிரஸ் ஆதரவாளர்கள்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்