காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகவேண்டாம் என ராகுலிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் எண்ணத்தை விட்டு விடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

தேர்தலில் தோல்வியுற்றிருந்தாலும், மக்களின் மனங்களை வென்றுள்ளதாக ராகுலிடம் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் தி.மு.க கூட்டணி அடைந்திருக்கும் மாபெரும் வெற்றிக்கு ராகுல்காந்தியும் தனது வாழ்த்துகளை ஸ்டாலினிடம் தெரிவித்தார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தியும் தேர்தல் வெற்றிக்காக தி.மு.க தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.