முக்கிய செய்திகள்

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு காங்.,, விசிக ஆதரவு!

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக மீண்டும் மருது கணேஷையே வேட்பாளராக நிறுத்தி உள்ளது. இந்நிலையில், ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு முழுமையான ஆதரவை அளிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை தெரிவித்துள்ள கட்சியின் தலைவர் திருமாவளவன், பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்ற செயல்திட்டத்தில் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறினார். தமிழகத்தின் பிற ஜனநாயக கட்சிகளும் பாஜகவை எதிர்க்கும் வகையில், திமுக வேட்பாளருக்கு ஆதரவளிக்க முன்வர வேண்டும் என திருமாவளவன் வேண்டுகோள் வி்டுத்தார். குறிப்பாக இடதுசாரிக் கட்சிகள் திமுக வேட்பாளரை ஆதரிக்க முன்வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

Cong, VCK Extends their support to DMK in RK Nagar Byelection