காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அந்த கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி,
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் வென்று காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்,
பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டுவந்த ஜிஎஸ்டி மாற்றியமைக்கப்படும் என தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் குறித்து விமர்சித்த ராகுல் காந்தி, கிரிக்கெட்டில் ரன் மெஷின் என சச்சின் டெண்டுல்கர் அழைக்கப்படுவது போல, சிவராஜ்சிங் சவுகான் அறிவிப்புகளை வெளியிடும் மெஷின் என விமர்சித்தார்.
இதுவரை 21,000 அறிவிப்புகளை சிவராஜ்சிங் வெளியிட்டும், மற்ற மாநிலங்களை விட மத்தியப்பிரதேசம் பின்தங்கியே உள்ளதாகவும் ராகுல் குற்றம்சாட்டினார்.