முக்கிய செய்திகள்

காங்’.,நாட்டின் பாதுகாப்பை புறந்தள்ளிவிட்டது : திருப்பூர் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கு

நாட்டின் பாதுகாப்பை காங்கிரஸ் கட்சி புறந்தள்ளிவிட்டது. இடைத்தரகர்கள் மூலமாக பேரம்

பேசுவதைத்தான் பாதுகாப்புத் துறை என நினைக்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியைப் பிரதமர் மோடி கடுமையாகச் சாடினார்

ஆந்திர மாநிலத்தில் பல்வேறு திட்டங்களையும் தொடங்கிவைத்து, பாஜக கூட்டத்தில் பிரமதர் மோடி இன்று பேசினார்.

பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருப்பூரில் அருகே பெருமாநல்லூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

இந்த விழாவில் சென்னையில் டிஎம்எஸ் – வண்ணாரப்பேட்டை இடையே சுமார் 10 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவையை திருப்பூரில் இருந்து காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

சென்னை சர்வதேச விமானநிலையத்தை நவீனப்படுத்தும் 2-ம் கட்டப் பணிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

மேலும், திருச்சி விமானநிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடம், திருப்பூரில் 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனை ஆகியவற்றை மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார்.

மேலும், எண்ணூரில் உள்ள பிபிசிஎல் கச்சா எண்ணெய் பாதுகாப்பு மையம், பகிர்மானத்தளம், ரூ.393 கோடியில்,

சென்னை மணலி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து துறைமுகத்துக்கு குழாய் மூலம் கொண்டு திட்டத்தையும் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பேரவைத் தலைவர் பி.தனபால் மற்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.