முக்கிய செய்திகள்

காங்கிரஸ் பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள் அனைத்தையும் ஏடிஎம் போன்று பயன்படுத்தியது : பிரதமர் மோடி

காங்கிரஸ் பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள் அனைத்தையும் ஏடிஎம் போன்று பயன்படுத்தியது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

இமச்சால பிரதேச மாநிலம் சோலான் மாவட்டத்தில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, இந்திய பாதுகாப்பு படைகளுக்கு தேவையான உபகரணங்களுக்கு 70 சதவிதம் வெளிநாடுகளையே சார்ந்து உள்ளது.

எனவே பாதுகாப்பு ஒப்பந்தங்கள் அனைத்தையும் பணம் எடுக்கும் ஏடிஎம் இயந்திரம் போன்று முந்தைய காங்கிரஸ் அரசு பயன்படுத்தியது என குற்றம் சாட்டினார்.

இந்திய பாதுகாப்பு படைகளுக்கு குண்டு துழைக்காத ஜாக்கெட்களை வழங்க முந்தைய அரசு ஒப்பந்தத்தை 6 ஆண்டுகள் தாமதப்படுத்தியது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

“முதல் முறை வாக்காளர்கள் அனைவரும் வளர்ச்சிக்காக வாக்களிக்க வேண்டும்,” எனக் கேட்டுக்கொண்டார்.