முக்கிய செய்திகள்

காங்., தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவராக ப.சிதம்பரம் நியமனம்..

வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவராக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நியமித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலை சந்திப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, விளம்பர குழு மற்றும் ஒருங்கினைப்பு குழு என்ற மூன்று குழுக்களை கடந்த மாதம் அமைத்தார்.

இந்நிலையில், அந்த குழுக்களுக்கு தலைவர் மற்றும் ஒருங்கினைப்பாளர்களை நியமித்து ராகுல் காந்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவராக மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், தேர்தல் ஒருங்கிணைப்பு குழு தலைவராக முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே அந்தோணி,

ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளராக முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.