முக்கிய செய்திகள்

காங். தலைவராக ராகுல் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு?..


ராகுலை காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகும் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளது.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத்தலைவராக தற்போது ராகுல் உள்ளார். கடந்த 2013 ம் ஆண்டு துணைத்தலைவராக பொறுப்பேற்றது முதல், காங்கிரஸ் கட்சிக்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார்.

 

அக்கட்சியின் தற்போதைய தலைவர் சோனியாவால், வயதின் காரணமாக முன்பு போல் உற்சாகமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியவில்லை

தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் பேசிய ராகுல், வரக்கூடிய லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக போட்டியிட தயாராக இருப்பதாக அறிவித்தார்.

தொடர்ந்து, நவம்பர் மாதத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் பொறுப்பேற்க உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

மேலும், ராகுல் தலைவரான பிறகு கூட, சோனியா அரசியலில் தொடர்ந்து செயல்படுவார் என்றும் அக்கட்சியின் பணிக்குழு உறுப்பினராகவும், நாடாளுமன்றக் குழுவின் காங்கிரஸ் தலைவராகவும் நீடிப்பார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், ராகுலை காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகும் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக செய்திகள் வந்துள்ளன