முக்கிய செய்திகள்

காங்கிரஸ் தலைவர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி , ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ,காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் கரி.ராமசாமி , கராத்தே தியாகராஜன் ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்தனர்.

வாக்குப் பதிவுக்கு பிந்தைய நிலவரங்கள், 4 சட்டமன்றத் தொகுதிகள் இடைத்தேர்தல் என பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது.

மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு பின்னர் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினை தொடர்ந்து சந்தித்து வருவது குறிப்பிடத் தக்கது.