கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும்,காங்கிரஸ் மூத்த தலைவருமான வசந்தகுமார் மறைவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது இரங்கல் செய்தியில்
எங்கள் அன்புத் தோழர் திரு வசந்தகுமார் MP அவர்களின் மறைவு எல்லோருக்கும் பேரதிர்ச்சியைத் தந்துள்ளது. ஆர்வமும், துடிப்பும், சிரிப்பும், பம்பரமாகச் சுழன்று பணியாற்றும் பண்பும் அவருக்கே உரித்தான குணநலன்கள். அவருடைய குடும்பத்தினருக்கும், தொகுதி மக்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்