காங்கிரஸ் வாக்கு வங்கிக்காக அரசியல் செய்கிறது : அமித் ஷா குற்றச்சாட்டு..

வாக்கு வங்கி அரசியல் செய்யும் காங்கிரஸ் கட்சியால் தேசத்துக்காக நிலைப்பாடு எடுக்க முடியாது என பாஜக தலைவர் அமித் ஷா கூறினார்.

ஹரியாணாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமை யிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

மொத்தம் 90 தொகுதி களைக் கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு வரும் 21-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இத்தேர்தலில், பாஜகவை ஆட் சியை விட்டு அகற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதேசமயத்தில், ஆட்சியை தக்க வைப்பதற்காக பாஜகவும் இரவு – பகலாக களப் பணியாற்றி வருகிறது.

இவை தவிர, இந்திய தேசிய லோக் தளம், பகுஜன் சமாஜ், ஜனநாயக ஜனதா ஆகிய கட்சி களும் தனித்தனியே போட்டியிடு வதால் ஹரியாணாவில் பல முனைப் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் ஹரியாணா மாநிலம் தியோகவனில் நடந்த பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் மூலம் அந்த மாநிலம் முழுமையாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு எந்த ஒரு பிரதமரும் எடுக்கத் துணியாத தேவையான நடவடிக்கையை பிரதமர் மோடி மட்டுமே எடுத்தார்.