முக்கிய செய்திகள்

காங்கிரஸ் வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து : ராகுல் காந்தி..

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

2 நாள் பயணமாக துபாய் சென்றுள்ள ராகுல் காந்தி அங்கு பணியாற்றும் இந்திய பணியாளர்களிடம் உரையாடினார்.

துபாயின் மிகப்பெரிய வளர்ச்சி இந்தியர்களின் பங்கு இல்லாமல் சாத்தியம் இல்லை என்று கூறினார். மேலும் “இங்குள்ள உயரமான கட்டடங்கள்,

பெரிய விமான நிலையங்கள் உங்களின் வேர்வையும் ரத்தத்தையும் கொடுத்து உருவாக்கி இந்தியர்களுக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள்” எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தான் காங்கிரஸின் முதல் கடமையாக இருக்கும் என்றும் கூறினார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு ஜுன் 2-லிருந்து ஆந்திராவிலிருந்த தெலங்கானா பிரிந்து இரண்டும் தனித்தனி மாநிலங்களானது குறிப்பிடத்தக்கது.