காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் இன்று உண்ணாவிரதம்..

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினா் இன்று நாடு முழுவதும் ஒருநாள் உண்ணா விரதம் மேற்கொள்கின்றனா்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமா்வு எம்.பி.க்களின் தொடா் அமளி காரணமாக ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் அவை நேரம் வீணடிக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தொிவித்து பா.ஜ.க. சாா்பில் வருகிற 12ம் தேதி நாடு தழுவிய உண்ணா விரத போராட்டம் நடைபெறும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா்.

இந்நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு, காவிாி விவகாரம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடா்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தவறி விட்டதாகவும், இதற்கு கண்டனம் தொிவித்தும் நாடுமுழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி சாா்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சி சாா்பில் தொிவிக்கப்பட்டது.

அதன்படி டெல்லி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறவுள்ள உண்ணா விரத போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி தலைமை ஏற்க உள்ளாா். இந்த போராட்டத்தில் ராகுல் காந்தி உள்பட கட்சியின் மூத்த தலைவா்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனா்…