தொடரும் பெட்ரோல் விலை உயர்வு : ஒரே நாளில் 51 காசுகள் உயர்வு..


சென்னையில் இன்று பெட்ரோல் விலை 51 காசுகள் அதிகரித்து லிட்டர் ஒன்றுக்கு ரூ.83.13 ஆகவும், டீசல் விலை 56 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.76.17 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆகஸ்ட் 27-ம் தேதி 80.94 காசுகளாக விற்பனை செய்யப்பட்டது. 10 நாள்களில் பெட்ரோல் விலை 3 ரூபாய் அதிகரித்துள்ளது.

தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல்,டீசல் விலையால் பொதுமக்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.